விசைப் பலகை அழுத்தங்களின் ஒலிசார் அலைவரிசை அடிப்படையிலான தாக்குதல்
August 27 , 2023 726 days 408 0
சமீபத்திய அறிக்கையானது, விசைப்பலகையின் பல அழுத்தங்களால் உருவாகும் ஒரு ஒலியைப் பகுப்பாய்வு செய்து கடவுச் சொற்களைக் கண்டறிவதற்குச் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்த முடியும் என்று வெளிக் கொணர்ந்துள்ளது.
இந்த நுட்பமானது, எந்த எழுத்துக்கள் அழுத்தப்படுகின்றன என்பதை அறிவதற்காக விசைப் பலகையில் தட்டச்சு செய்வதால் உருவாகும் ஒலிகளைப் பயன்படுத்துகிறது.
இந்த தனித்துவமான ஒலிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், கணினி நிரல்களில் ஊடுறுவோர் சரியான கருவிகளைக் கொண்டு, மக்கள் தட்டச்சு செய்யும் சில துல்லியமான எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கண்டறிய முடியும்.
முக்கியச் செயல்முறையின் பக்க விளைவுத் தாக்குதல்கள் (Side Channel attacks) என்பது குறியாக்க முறையில் பயன்படுத்தப்படும் துணை அமைப்புகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் குறியாக்கவியல் வழிமுறையை ஊடுருவச் செய்யும் முறையாகும்.