விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக புதிய ரூ.100 மதிப்புள்ள நாணயம்
October 16 , 2020 1750 days 870 0
இந்தியப் பிரதமர் அவர்கள் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று, விஜய ராஜே சிந்தியாவின் 100வது பிறந்த தின நினைவன்று, அவரது நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
குவாலியரின் ராஜமாதா என்று வெகு சிறப்பாக அறியப்படும் விஜய ராஜே சிந்தியா, பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.
இவர் குவாலியரின் கடைசி ஆட்சியாளரான மகாராஜா ஜிவாஜி ராவ் சிந்தியாவின் மனைவி ஆவார். இவர் அந்நில ப்பகுதியில் உயரிய மதிப்புடைய அரச குடும்பத்தினரில் ஒருவராக மதிப்பிடப் பட்டுள்ளார்.
இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.