தமிழ்நாடு அரசானது, 2025–26 ஆம் ஆண்டு முதல் மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் 'விடியல் பயணம்' இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கு தகுதி பெறுவதற்குப் பயனாளிகள், 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட 21 வகைகளின் கீழ் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான குறைபாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
சுமார் 1,100 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்கள் முழுமையாகவும் பகுதியளவு மலைக்கடவுப் பாதைகளிலும் வெள்ளைப் பலகை கொண்ட பேருந்துகளில் பயணிக்கலாம்.
இந்தத் திட்டமானது, சேவை வழங்கப்படும் பகுதிகளில் 35 கி.மீ வரையிலும், மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் சேவை வழங்கப்படாத பகுதிகளில் 40 கி.மீ வரையிலும் பயணிக்க அனுமதிக்கிறது.
இந்த விரிவாக்கத்தினைச் செயல்படுத்துவதற்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 88.65 லட்சம் ரூபாய் மானியத்தை அனுமதித்துள்ளது.