2019 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியிலிருந்து ஜுன் 30 ஆம் தேதி வரை வருடாந்திர கோடைக்கால விடுமுறைக்காக இந்திய உச்சநீதிமன்றம் விடுமுறை அளிக்கப்பட விருக்கின்றது.
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற விதிகள், 2013-ன் கீழ் ஆணை II-ன் படி விதி 6-ன் கீழ் சிறப்பு விடுமுறைக் கால அமர்வுகளை அமைத்துள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றமானது விடுமுறைக் காலத்தின் போதும் “முக்கியமான வழக்கு” என்று ஒன்றைக் கருதினால் அது குறித்து விசாரணையை மேற்கொள்ளும்.
இது பொதுவாக அடிப்படை உரிமைகளை செயல்படுத்தக்கூடிய ஆட்கொணர்வு நீதிப் பேராணை, ஆவணக் கேட்பு ஆணை, தடை ஆணை, தகுதிப் பேராணை தொடர்புடைய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.
முதன்முறையாக, மே 25 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை விடுமுறைக் கால அமர்விற்கு இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே தலைமை வகிக்கவிருக்கின்றார்.