TNPSC Thervupettagam

விட்டல்பாய் படேலின் தலைமையின் 100 ஆம் ஆண்டு நிறைவு

August 28 , 2025 9 days 62 0
  • இரண்டு நாட்கள் அளவிலான அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்றது.
  • விட்டல்பாய் படேல் மத்திய சட்டமன்றத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவராக பொறுப்பேற்றதன் 100 ஆம் ஆண்டு நிறைவினை இந்த மாநாடு நினைவு கூறியது.
  • சட்டமன்றச் சபாநாயகர்களின் பணிகளைத் தொடர்ந்து வழி நடத்தும் பல்வேறு நடைமுறைகளை அவர் நிறுவினார்.
  • அவரது பதவிக் காலத்தில் மத்திய அரசு அளவிலும் மாநிலங்களிலும் சட்டமன்றத் துறை மற்றும் செயலகம் நிறுவப்பட்டன.
  • விட்டல்பாய் படேல், சட்டமன்றங்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமாக இருப்பதை வலியுறுத்தினார்.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டமன்றத்தின் கீழ் அவையாக மத்தியச் சட்டமன்றம் இருந்தது.
  • இந்த அவை ஆரம்பத்தில் தற்போது டெல்லி சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்