3I/ATLAS எனும் விண்மீன் மண்டல வால் நட்சத்திரமானது, சூரியனை விட்டு விலகி பூமியை நோக்கி நகரும் போது எதிர்பாராத விதமாக அதன் வேகம் முடுக்குவிக்கப் படுகிறது.
அது அதன் பெரிஹேலியன் நிலையில் (சூரியனுக்கு மிக அருகில்) கணிசமான நிறை இழந்து, ஈர்ப்பு விசையற்ற முடுக்கத்தை ஏற்படுத்தியதாக அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
அதன் வேகம் 130,000 மைல் வேகத்தில் இருந்து சுமார் 152,000 மைல் வேகத்தில் அதிகரித்தது.
சூரியனின் ஈர்ப்பு விசையால் அதன் முடுக்கத்தை முழுமையாக விளக்க முடியாது.
பெரிஹேலியன் நிலைக்கு அருகில் மதிப்பிடப்பட்ட நிறை இழப்பு 13 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
வால் நட்சத்திரம் ஆனது பூமிக்கு மிக அருகில் என்ற நிலையில் இருந்து ஆறு வாரங்கள் தொலைவில் உள்ளது.