TNPSC Thervupettagam

விண்மீன்களிடை வால்நட்சத்திரத்தில் கரிம மூலக்கூறுகள்

February 26 , 2026 17 hrs 0 min 2 0
  • நாசாவின் SPHEREx விண்வெளி தொலைநோக்கி விண்மீன்களிடை வால்நட்சத்திரமான 3I/ATLAS இல் உள்ள கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்தது.
  • SPHEREx டிசம்பர் 2025 இல் அகச்சிவப்பு அலைநீளங்களைப் பயன்படுத்தி வால் நட்சத்திரத்தைக் கவனித்தது.
  • இதில் ஆய்வாளர்கள் மெத்தனால், மீத்தேன் மற்றும் சயனைடு போன்ற கரிம மூலக் கூறுகளைக் கண்டறிந்தனர்.
  • பதங்கமாதல் காரணமாக சூரியனுக்கு மிக அருகில் சென்ற பிறகு வால் நட்சத்திரம் அதிகரித்த பிரகாசத்தைக் காட்டியது.
  • வால் நட்சத்திரம் 3I/ATLAS ஜூலை 2025 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு விண்மீன்களிடை பொருளாக உறுதிப்படுத்தப்பட்டது.
  • 102 அகச்சிவப்பு அலைநீளங்களில் பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக SPHEREx மார்ச் 2025 இல் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்