TNPSC Thervupettagam

விண்வெளி தூசுகளைக் கண்காணித்தல்

January 12 , 2026 11 days 74 0
  • ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் விண்வெளி தூசுகள் பூமியின் வளிமண்டலத்தைத் தாக்குவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • இது இந்தியாவின் முதல் உள்நாட்டு விண்வெளித் தூசு கண்டறியும் கருவியான ‘டஸ்ட் எக்ஸ்பெரிமென்ட்’ (DEX) எனும் கருவி மூலம் கண்டறியப்பட்டது.
  • DEX கருவியானது ஜனவரி 1, 2024 அன்று, எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் (XPoSat) திட்டம் மூலம் ஏவப்பட்டது.
  • கண்டறியப்பட்ட துகள்களானது, முதன்மையாக வால்மீன்கள் மற்றும் சிறுகோள்களிலிருந்து வரும் கோள்களிடைத் தூசுத் துகள்களாகும்.
  • இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு மெல்லிய விண்கல் அடுக்கை உருவாக்குகின்றன.
  • இந்தத் தரவுகள் செயற்கைக்கோள் பாதுகாப்பு மற்றும் விண்வெளிச் சூழல் ஆய்வுகளுக்கு உதவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்