விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான 3வது விண்கலம்
June 8 , 2022 1260 days 562 0
சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
சீன விண்வெளி வீரர்கள் ஷென்சோ-14 விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுகுவான் ஒரு செயற்கைக் கோள் ஏவுதள மையத்திலிருந்து லாங் மார்ச் 2F என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப் பட்டது.
டியாங்காங் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே எனும் மையப் பெட்டகத்தில் தங்கி அவர்கள் தங்களது பணிகளைச் செய்வார்கள்.