விண்வெளி வீரர்கள் பயணப் பெட்டகத்தின் திரவ உந்துவிசை அமைப்பு
January 26 , 2025 116 days 179 0
திரவ உந்துவிசை அமைப்பின் ஒருங்கிணைப்பை மிக வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ககன்யான் (G1) திட்டத்தின் முதன்முதலாவது விண்வெளி வீரர்கள் இல்லாத பயணத்திற்கான பெட்டகத்தினை இஸ்ரோ பெற்றுள்ளது.
விண்வெளி வீரர்கள் குழுவினரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னதாக, இஸ்ரோ அதன் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் இல்லாத இப்பெட்டகத்தினை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ககன்யான்-G1 கலமானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து ஏவப்பட உள்ள ககன்யான்-G2 மற்றும் G3 எனப்படும் விண்வெளி வீரர்கள் இல்லாத இரண்டு பெட்டகங்களுக்கு அடுத்தப் பயணம் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு வழி வகுக்கும்.