சீனா விண்வெளியில் உலகின் முதல் மீத்திறன் கணினி வலையமைப்பை உருவாக்கி வருகிறது என்பதோடு சமீபத்தில் 12 செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செயற்கைக் கோள்களை இதற்காக இது விண்ணில் ஏவியது.
இந்த 12 செயற்கைக்கோள்களில், ஒவ்வொன்றும் வினாடிக்கு சுமார் 744 டிரில்லியன் செயல்பாடுகளை செயலாக்கக் கூடியது என்பதோடு இவை வினாடிக்கு சுமார் 100 ஜிகா பைட்கள் வரையிலான பரிமாற்ற விகிதங்களைக் கொண்டுள்ளன.
விண்வெளிச் செயலாக்கச் செயற்கைக்கோள் தொகுப்பு ஆனது 'ஸ்டார் கம்ப்யூட்டிங்' திட்டத்தின் கீழான முதல் செயற்கைக்கோள் தொகுப்பு ஆகும்.
இந்த "மூன்று அமைப்பு கொண்ட செயலாக்கச் செயற்கைக்கோள் தொகுப்பு" ஆனது விண்வெளி அடிப்படையிலான தரவுச் செயலாக்க வலையமைப்பாகச் செயல்படும்.
இந்த வலையமைப்பு ஆனது பூமியை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு உள் கட்டமைப்பையும் சாராமல், அதன் சுற்றுப் பாதையில் மிகவும் நேரடியாக ஏராளமான தகவல்களைக் கணக்கிடும் திறன் கொண்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வரம்பற்ற சூரிய சக்தியைப் பயன்படுத்தப் பெய்ஜிங் "விண்வெளியின் திரீ கார்ஜஸ் அணை" எனும் அமைப்பை கட்டமைக்கும் திட்டங்களை வெளியிட்டது.
இந்த முன்னெடுப்பானது பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவிநிலைச் சுற்றுப்பாதையில் ஒரு கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பெரிய சூரிய ஒளி ஆற்றல் சார் தொகுப்பினை நிலை நிறுத்துவதை உள்ளடக்கியது.