ஐக்கிய ராஜ்ஜியத்தின் க்ளூசெஸ்டர்சையரிலுள்ள (Gloucestershire) வின்ச்கோம்பே நகரில் மோதிய விண்கல் ஒன்றின் ஒரு பகுதியை, காட்சிக்கு வைக்க உள்ளதாக லண்டனில் அமைந்துள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கல்லானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் மண்ணில் வீழ்ந்தது.
இந்த விண்கல்லானது 4.5 பில்லியன் வருடங்கள் பழமையானதாகும்.
கரிம விண்கல் (carbonaceous meteorite) என்பதால் இது ஒரு அரிதான ஒன்றாகும்.
இதுவரை மனித இனத்திற்குத் தெரிந்த 65,000 விண்கல் வகைகளில் வெறும் 1000 மட்டுமே இந்த வகையைச் சேர்ந்தவை ஆகும்.
வின்ச்கோம்ப்பே விண்கல்லானது ஹயபூசா 2 என்ற விண்கலத்தினால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு விண்கல் மாதிரியினை ஒத்துள்ளது.