விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைத் திட்டம்
May 8 , 2025 112 days 120 0
நாடு முழுவதும் பதிவாகும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் திட்டத்தினை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அந்த விபத்துக்கள் நடைபெற்ற நாளிலிருந்து அதிகபட்சமாக ஏழு நாட்களுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவிப் பெறுவார்கள்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தத் திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு மே 05 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய சுகாதார ஆணையம் ஆனது, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான முகமையாக (NHA) விளங்கும்.
அந்தந்த மாநிலத்திற்கான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதன்மை நிறுவனமாக மாநிலச் சாலைப் பாதுகாப்புச் சபை விளங்கும்.
"Golden hour" என்ற சொல்லானது, மோசமான விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளான முக்கியமான காலக் கட்டத்தினைக் குறிப்பதால், அந்த காலக் கட்டத்தில் உடனடி சிகிச்சை அளிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவரின் மரணத்தைத் தடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று வரையறுக்கப்படுகிறது.