TNPSC Thervupettagam

விபத்து மேலாண்மைச் சேவைகள்

April 21 , 2023 829 days 337 0
  • சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காகவும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் தனது மார்க்யூ விபத்து மேலாண்மைச் சேவைகளை (IMS) அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு இந்திய அரசு திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைகளில் மருத்துவ அவசர ஊர்திகள், பளு தூக்கும் இயந்திரங்கள், பகல் இரவு என நாள் முழுவதுமான ரோந்து வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நிலை நிறுத்தப்படும்.
  • விபத்துக்குள்ளானவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் ஒரு முக்கியச் சேவையான, விபத்துக்குப் பிந்தைய விரைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட திறமையான தொழிலாளர்களையும் இது கொண்டிருக்கும்.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்கள் காரணமாக 156,000 உயிர் இழப்புகள் அல்லது ஒரு நாளைக்கு 457 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்திய சாலைகளில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு விபத்து மற்றும் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு என்ற அளவு பதிவாகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்