அபுதாபியிலிருந்து புது தில்லி வரை செல்லும் எதிஹாட் விமானம் மூன்று மாத கால நீண்ட இடைவெளிக்குப் பின்பு பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த முதலாவது விமானமாக உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப் படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளும் விமானச் சேவைக்குத் தடை விதித்திருந்தன.
2019 ஆம் ஆண்டு ஜுன் 02 அன்று இரு நாடுகளுக்கிடையே விமானச் சேவை தொடங்கியது.