இந்தியாவில் விமான நிறுவனங்கள் விமானங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான அபாயங்கள் மற்றும் செலவுகளைக் குறைக்க உதவும் 2025 ஆம் ஆண்டு விமானம் சார்ந்த ஈடுபாடுகளைப் பாதுகாத்தல் மசோதாவிற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது 2001 ஆம் ஆண்டு கேப் டவுன் உடன்படிக்கையின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
இந்த உடன்படிக்கை ஆனது, சர்வதேசக் குத்தகை ஒப்பந்தங்களை எளிமைப் படுத்தச் செய்வதையும் தரப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்தியா இந்த உடன்படிக்கையினை 2008 ஆம் ஆண்டில் அதிகராப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது.