வியட்நாம் நாட்டிற்கு ஐஎன்எஸ் கிர்பான் கப்பல் பரிசளிப்பு
June 28 , 2023 786 days 407 0
இந்திய நாடானது வியட்நாமின் கடற்படைத் திறன்களை மேம்படுத்தச் செய்வதற்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் என்ற ஒரு ஏவுகணை போர்க் கப்பலினை வியட்நாம் நாட்டிற்குப் பரிசாக வழங்கியுள்ளது.
1991 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் ஒரு குக்ரி வகை ஏவுகணை போர்க் கப்பலாகும்.
இது 25 நாட் என்ற அளவிற்கும் மேலான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.