வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள்களின் ஆய்வுக் கலம் – Juice
April 19 , 2023 853 days 385 0
ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA) வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள்களின் ஒரு ஆய்வுக் கலம் அல்லது ஜுஸ் ஆய்வுப் பணி கலத்தினை விண்ணில் ஏவியுள்ளது.
இது சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சூழல்களைக் கொண்டுள்ள அதன் பனி நிறைந்த துணைக் கோள்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டு விண்கலங்கள் மட்டுமே இதுவரை வியாழன் கோளினை ஆய்வு செய்துள்ளன.
1995 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்த இராட்சத வாயுக் கோளினை கலிலியோ ஆய்வுக் கலம் சுற்றி வந்தது.
ஜூனோ ஆய்வுக் கலம் 2016 ஆம் ஆண்டு முதல் இந்தக் கிரகத்தைச் சுற்றி வருகிறது.