இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைந்து, காணொலி வாயிலாக நடைபெற உள்ள ஓர் உச்சி மாநாட்டின் போது ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தினை மேற்கொள்ள உள்ளன.
இந்தக் காணொலி வாயிலான உச்சி மாநாடானது அபுதாபியின் பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் சையது அல் நஹ்யன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையே நடைபெற உள்ளது.
குறிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் 50 ஆண்டுகள் நிறைவடையும் அதே சமயத்தில் இந்தியா விடுதலை பெற்றதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.