விரிவான மற்றும் முற்போக்கான பசிபிக் எல்லை கடந்த கூட்டிணைவு ஒப்பந்தம் – சீனா
September 21 , 2021 1427 days 598 0
ஆசிய – பசிபிக் தடையில்லா வர்த்தகக் குழுமம் (அ) விரிவான மற்றும் முற்போக்கான பசிபிக் எல்லை கடந்த கூட்டிணைவு ஒப்பந்தத்தில் இணைவதற்கு சீனா விண்ணப்பம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் முன் வைக்கப் பட்ட பிசிபிக் எல்லை கடந்த கூட்டிணைவு ஒப்பந்தமாகும்.
ஆனால் 2017 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் இக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பிடன் இன்னும் இக்குழுவில் இணைய வில்லை.
ஆரம்பத்தில் சீனா இக்குழுவில் சேர்க்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தமானது ஆஸ்திரேலியா, புரூனே, சிலி, கனடா, ஜப்பான், மெக்சிகோ, மலேசியா, பெரூ, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகளுக்கு இடையேயான ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும்.