விரிவான மாதிரிக் கணக்கெடுப்பின் முடிவுகள் - தொலைத்தொடர்பு 2025
June 6 , 2025 57 days 73 0
கிராமப்புறங்களில், 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களில், தோராயமாக 96.8 சதவீதம் பேர் கடந்த மூன்று மாதங்களில் குறைந்தது ஒரு முறையாவது அலைபேசிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
கிராமப்புறங்களில் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களில், சுமார் 95.5 சதவீதம் பேர் திறன்பேசிகளை வைத்திருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில், அதே வயதுடையவர்களில் சுமார் 97.6 சதவீதம் பேர் திறன்பேசி உபகரணங்களை வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில், தோராயமாக 85.5 சதவீத வீடுகளில் குறைந்தது ஒரு திறன்பேசி உள்ளது.
இந்தியாவில் சுமார் 86.3 சதவீத வீடுகளில், வீட்டு வளாகத்திற்குள் இணைய அணுகல் உள்ளது.
கிராமப்புறங்களில் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில், 51.4 சதவீதப் பெண்கள் இணைய வழி வங்கி பரிவர்த்தனைகளைச் செய்யும் திறனைப் பெற்றுள்ளனர்.
இது 2022-23 ஆம் ஆண்டில் 19.6 சதவீதமாக இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.