TNPSC Thervupettagam

விரைவான குடியேற்றத் திட்ட விரிவாக்கம்

September 16 , 2025 14 hrs 0 min 21 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நம்பகமான பயணிகளின் விரைவான குடியேற்றத்திற்கான (உள் நுழைவு வசதி) திட்டத்தை (FTI-TTP) மேலும் ஐந்து விமான நிலையங்களில் தொடங்கியது.
  • புதிதாக சேர்க்கப்பட்ட விமான நிலையங்கள் லக்னோ, திருவனந்தபுரம், திருச்சிராப் பள்ளி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் ஆகியனவாகும்.
  • இந்தத் திட்டமானது முன்னதாக சரிபார்க்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளி நாடு வாழ் இந்திய (OCI) அட்டைதாரர்களுக்கு 30 வினாடி நேரத்திலான குடியேற்ற அனுமதியை வழங்குகிறது.
  • FTI-TTP ஆனது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லி விமான நிலையத்தில் தொடங்கப்பட்டதோடு பின்னர் மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு உட்பட ஏழு முக்கிய விமான நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
  • இந்தத் திட்டத்தினை நவி மும்பை மற்றும் ஜேவாரில் நிறுவப்பட உள்ள விமான நிலையங்கள் உட்பட 21 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
  • தற்போது இலவசமாக செயல்படுத்தப்படும் FTI-TTP ஆனது பயணிகளின் வசதி மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்