விரைவு அதிரடிப் படை நிறுவப் பட்ட தினம் – 08 அக்டோபர்
October 11 , 2021 1526 days 983 0
விரைவு அதிரடிப் படையானது 1992 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு படைப் பிரிவாக உருவாக்கப்பட்டது.
இது கலகம் மற்றும் கலகம் சார்ந்த சூழ்நிலைகளை அதிரடியாகவும் படைப் பிரிவுகளின் குறைவான பயன்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி உருவாக்கப் பட்டது.
இது சுழிய நேர எதிர்வினைப் படை (Zero - time response Force) என்றும் அழைக்கப் படுகிறது.
விரைவு அதிரடிப் படையானது “உணர்திறன் மிக்க காவல் பணியுடன் மனிதத்திற்குச் சேவை செய்தல்” (Serving Humanity with Sensitive Policing) என்ற தனது சொந்த முழக்கத்தின் படி செயல்படுகின்றது.