விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு (HAWK) அமைப்பு
November 1 , 2023 793 days 492 0
கர்நாடக வனத்துறையானது, இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் இணைந்து, விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு (HAWK) என்ற அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது காடு மற்றும் வனவிலங்கு சார்ந்த அனைத்து வகையான குற்றங்களையும் கண்காணிப்பதற்கான ஒரு சிறப்பு மென்பொருள் தளமாகும்.
வனவிலங்குகளின் மரணம், சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை கண்காணிக்க இந்த அமைப்பு உதவும்.