விர்லி கண்டாரில் நடைபெற்ற ஒரு புதிய அகழ்வாராய்ச்சியானது தனித்துவமான அடக்கக் கட்டமைப்புகள் மற்றும் தொல்பொருட்களை வெளிப்படுத்தியுள்ளது.
இது மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால அடக்கத் தளமாகும்.
கற்திட்டைகளில் நடைபெறும் அடக்க முறைகளில் இருந்து வேறுபட்டதாக இந்த அகழ்வாராய்ச்சியில் கல் வட்டங்கள் மற்றும் நடுகற்கள் கொண்ட கலப்பு கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நிலைத்தன்மைக்காக கருப்பு/கரிசல் மண்ணின் மீது ஒரு முறையான வரிசையில் பானைகள் தலைகீழாக வைக்கப்பட்டிருந்தன.
செப்புக் கழுத்தணி, இரும்புக் கருவிகள், கார்னிலியன் மணிகள், தங்கக் காதணி மற்றும் எலும்பு எச்சங்கள் ஆகியவை இங்கு கிடைத்த தொல்பொருட்களில் அடங்கும்.
கி.மு. 500-ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இடத்தில், கி.மு. 1000 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தின் கலாச்சாரச் சான்றுகள் கிடைத்துள்ளன.