TNPSC Thervupettagam

விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்குத் தனி FASTags

May 21 , 2026 12 days 132 0
  • பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (MLFF) சுங்கக் கட்டண முறையின் கீழ், சுங்கக்கட்டணம் விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்குத் தனிப் பிரிவில் ஃபாஸ்டேக்குகளை (FASTags) வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த அமைப்பானது, ஆயுதப் படைகள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசு வாகனங்களை உள்ளடக்கி, அவை சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி தடையின்றிச் செல்வதை உறுதி செய்யும்.
  • பல வழித்தடத் தடையற்றப் போக்குவரத்து (MLFF) சுங்கக் கட்டண முறை என்பது செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் தானியங்கி எண்கதிர் பலகை அங்கீகாரம் (ANPR) ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாகனங்களை நிறுத்தாமல் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு முறையாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட ஃபாஸ்டேக்குகளைப் பயன்படுத்துவதுடன் இவை சுங்கக் கட்டணத்தைக் கழிக்காமல் வாகனத்தின் வருகையைப் பதிவு செய்யும்.
  • விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவது அல்லது வரம்பற்ற இலவச அனுமதி கொண்ட பிரத்யேக ஃபாஸ்டேக்குகளை வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்