விலங்குகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்குப் புதிய திட்டம்
November 14 , 2024 300 days 219 0
‘தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்’ என்ற முன்னெடுப்பினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இது "விலங்குவழியிலான சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுத்தல், கண்டறிதல், எதிர் நடவடிக்கை மேற்கொள்தல்" ஆகியவற்றில் நாட்டின் திறனை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் உருவாக்கப்பட்ட பெருந்தொற்று நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நிதியின் அடிப்படை நோக்கம் ஆனது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு எதிர்காலப் பெருந்தொற்றுகளை அடையாளம் காணவும், அது குறித்து அறிக்கையிடவும் மற்றும் கட்டுப்படுத்தவும் அவற்றின் திறனை வலுப்படுத்த உதவுவதாகும்.
ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகிய மூன்று அமலாக்க முகமைகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படும்.
இது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.