விலங்குகளில் ஏற்படும் பெருந்தொற்றிற்கான தயார் நிலை முன்னெடுப்பு
April 17 , 2023 760 days 304 0
மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர், விலங்குகளில் ஏற்படும் பெருந்தொற்றிற்கான தயார் நிலை முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
இதனுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய, ஒரு சுகாதாரத் திட்டத்திற்கான விலங்குகளின் ஆரோக்கிய அமைப்பு ஆதரவு (AHSSOH) திட்டமும் தொடங்கப்பட்டது.
இவை விலங்குகளில் ஏற்படும் பெருந்தொற்றிற்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை மற்றும் சாத்தியமான விலங்குகளின் தொற்றுநோய்களுக்கான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றினை மேம்படுத்தும்.