1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், 2023 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கருத்தடை விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது 2001 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கருத்தடை (நாய்களுக்கான) விதிகளுக்கு மாற்றாக முன் வைக்கப் படுகிறது.
இந்த விதிகளின்படி, தெரு நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றினை உள்ளடக்கிய விலங்குகளுக்கான கருத்தடைத் திட்டமானது, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் / நகராட்சிகள் / மாநகராட்சிக் கழகங்கள் மற்றும் ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநகராட்சிக் கழகங்கள் விலங்குகளுக்கான கருத்தடைத் திட்டம் மற்றும் ரேபிஸ் தடுப்பு திட்டம் ஆகியவற்றினை ஒருங்கே செயல்படுத்த வேண்டும்.
ஒரு பகுதியிலிருந்து மற்றொருப் பகுதிக்கு நாய்களை இடமாற்றம் செய்யாமல், மனிதர்கள் மற்றும் தெருநாய்கள் ஆகியோருக்கு மத்தியிலான சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் இந்த விதிகள் வழங்குகிறது.