விலங்குகளுக்கான முதலாவது நடமாடும் செயற்கைமுறை கருத்தரித்தல் மையம்
January 5 , 2023 920 days 552 0
இந்தியாவில் முதல்முறையாக விலங்குகளுக்கான நடமாடும் செயற்கை முறை கருத்தரித்தல் மையமானது குஜராத்தின் அம்ரேலியில் தொடங்கப்பட்டுள்ளது.
நடமாடும் செயற்கை முறை கருத்தரித்தல் மைய வசதி கொண்ட ஒரு வாகனமானது, "இந்திய அரசு மற்றும் அமர் டெய்ரி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் தொடங்கப் பட்டுள்ளது".
செயற்கை முறை கருத்தரித்தல் என்பது கருவுறுதலுக்கு உதவுவதற்கும் குழந்தையின் கரு வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு சிக்கலான செயல்முறை ஆகும்.
இது விலங்குகளில் காணப்படும் அதிகளவிலான பெண் முதலுருக்களை அதிக விகிதத்தில் பெருக்கமடையச் செய்வதற்கான ஒரு மேம்படுத்தப் பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பமாகும்.