TNPSC Thervupettagam

விலே ஆராய்ச்சி ஹீரோஸ் பரிசு 2025

February 11 , 2026 2 days 43 0
  • இந்தியப் பொது சுகாதார நிபுணரான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, " Impact Beyond Academia " பிரிவில் விலே ஆராய்ச்சி ஹீரோஸ் பரிசு 2025 ஐ (Wiley Research Heroes Prize 2025) வென்றார்.
  • இந்த உலகளாவிய ஆராய்ச்சி அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • இந்தப் பரிசு, பொதுக் கொள்கை மற்றும் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் ஆராய்ச்சியாளர்களைக் கௌரவிக்கிறது.
  • டாக்டர் லஹாரியாவின் ஆராய்ச்சி தடுப்பூசித் திட்டங்கள், தாய்வழி மற்றும் குழந்தை சுகாதாரம் மற்றும் ஆரம்ப சுகாதார அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது.
  • அவர் முன்னாள் உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரியாவார்.
  • டாக்டர் நம்ரதா பதக், டாக்டர் குலூத் அல்சாயேக், டாக்டர் நந்திதா கருட் மற்றும் டாக்டர் இம்மானுவேல் பெப்ரா ஆகியோர் இதர விருது பெற்ற ஆய்வாளர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்