தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையமானது (National Pharmaceutical Pricing Authority - NPPA) கர்நாடக மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையுடன் இணைந்து, அம்மாநிலத்தில் “விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகை” (Price Monitoring and Resource Unit - PMRU) திறந்து வைத்துள்ளது.
மாநிலத்தில் மருந்துகளின் விலையைக் கண்காணிக்கவும் இந்த மருந்துகளின் இருப்பை உறுதி செய்யவும் NPPAவிற்கு உதவுவதே PMRU அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டில் மருத்துவ மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் NPPA ஆனது 1997 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஒழுங்குமுறை ஆணையமாகும்.
PMRU அமைக்கப்பட்ட 12வது மாநிலம் கர்நாடகம் ஆகும்.
ஏற்கனவே அமைக்கப் பட்டவை – கேரளா, ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, நாகாலாந்து, திரிபுரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மிசோரம்.