TNPSC Thervupettagam

விளையாட்டிற்கான மரபணு திட்டம்

April 19 , 2026 2 days 56 0
  • 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, விளையாட்டு வீரர்களுக்கான மரபணு தரவுத் தளத்தை உருவாக்குவதற்காக குஜராத் மாநிலம் விளையாட்டு மரபணு திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • மரபணு, உடலியல் மற்றும் செயல்திறன் தரவுகளை இணைத்து குஜராத் விளையாட்டு வீரர்களின் மரபணு தரவுத் தளத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வேகம், சகிப்புத்தன்மை மற்றும் வலிமை போன்ற பண்புகளின் அடிப்படையில் திறமைகளை முன்கூட்டியே கண்டறிவதில் இது கவனம் செலுத்துகிறது.
  • தடகளச் செயல்திறனில் மரபணுக் காரணிகள் 66% வரை பங்களிப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • காயங்களைத் தடுத்தல், தனிப் பயனாக்கப்பட்ட பயிற்சி மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இது துணைபுரிகிறது.
  • மரபணுப் பாகுபாடு, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் தரவுகளை அறநெறிப் படி பயன்படுத்துதல் ஆகியவை இது தொடர்பான கவலைகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்