விளையாட்டுத் துறைக்கான உள்ளகப் பயிற்சிக் கொள்கை 2025
December 27 , 2025 7 days 29 0
இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் (MYAS) ஆனது ஒரு விரிவான உள்ளகப் பயிற்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கொள்கையின் கீழ், MYAS மற்றும் அதன் நிறுவனங்கள் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 452 உள்ளகப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) மற்றும் தேசிய ஊக்கமருந்துச் சோதனை ஆய்வகம் (NDTL) போன்ற அமைப்புகளில் இந்த உள்ளகப் பயிற்சிகள் நடைபெறும்.
இந்தத் திட்டத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் படும்.
உள்ளகப் பயிற்சிகளில் விளையாட்டு நிர்வாகம், விளையாட்டு அறிவியல், ஊக்க மருந்து எதிர்ப்பு மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தக் கொள்கையானது கேலோ பாரத் நிதி 2025 மற்றும் தேசிய விளையாட்டுக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.