TNPSC Thervupettagam

விழுப்புரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

November 16 , 2026 4 days 96 0
  • தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிமலையில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஓட்டம்பட்டு தண்டரி கிராமத்தில் ஒரு பாறைக் குகைக்கு அடியில் செம்மண்ணால் (Red Ochre) வரையப்பட்ட இந்த ஓவியங்கள் காணப்பட்டன.
  • இவை மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகளையும், வடிவியல் வடிவங்கள் மற்றும் தாவர உருவங்களையும் சித்தரிக்கின்றன.
  • அருகிலுள்ள கரடிச்சுனையில் மூன்று பாறைப் பள்ளங்களும் கண்டறியப்பட்டுள்ளன; இவை புதிய கற்கால மக்களால் கற்கருவிகளைக் கூர்மைப்படுத்த அல்லது மெருகூட்டப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய வேட்டையாடி-உணவு சேகரிக்கும் சமூகங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கான சான்றுகளை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்