விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான கொள்கை கட்டமைப்பு
February 16 , 2019 2400 days 777 0
தமிழ்நாடு விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான ஒப்பந்த விவசாய மற்றும் சேவைகள் மசோதா (ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) 2019 சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தமிழ்நாடு ஒப்பந்த விவசாய மற்றும் சேவை (ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) ஆணையத்தை (TN Contract Farming and Services (Promotion and Facilitation) Authority) ஏற்படுத்திட எண்ணுகின்றது.
இந்த ஆணையம் ஒப்பந்த விவசாயத்தை மிகுந்த வெளிப்படையாகவும் எளிதாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள உதவுவதோடு சில குறிப்பிட்ட பகுதிகளில் உரிமையியல் நீதிமன்றத்திற்கான அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.
இம்மசோதாவை ஏற்றுக் கொள்வதற்கான நோக்கம் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி சட்ட மசோதாவின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது.