விவசாயப் புள்ளிவிவரங்கள் மீதான 8வது சர்வதேச மாநாடு – தில்லி
November 24 , 2019 2081 days 666 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO - Food and Agriculture Organization), உலக வங்கி (WB - World Bank), அமெரிக்காவின் வேளாண் துறை (United States Department of Agriculture) மற்றும் பிற சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்படும் ஒரு தொடர் மாநாடுகளாகும்.
இது விவசாயப் புள்ளிவிவர (தகவல் / தரவு) வளர்ச்சியின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
இந்த மாநாட்டின் கருப்பொருள், “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்காக வேளாண் முறையை மாற்றுவதற்கான புள்ளிவிவரங்கள்” என்பதாகும்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயி நல அமைச்சகத்தின் கீழ் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையானது இந்த மாநாட்டை நடத்தும் அமைப்பாகும்.