விவசாயிகளின் பயன்பாட்டிற்கு யூரியா கோல்டு அறிமுகம்
July 31 , 2023 708 days 381 0
யூரியா கோல்டு சமீபத்தில் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப் பட்டது.
“யூரியா கோல்டு” என்பது சல்பர் (கந்தகம்) பூசப்பட்ட புதிய யூரியா வகையாகும்.
இது மண்ணில் உள்ள கந்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த “புதிய வகை உரம்” ஆனது வேம்பு பூசப்பட்ட யூரியாவை விட விலை மலிவானது மற்றும் செயல்திறன் மிக்கதாகும்.
இது மேம்பட்ட நைட்ரஜன் பயன்பாட்டுத் திறன், இந்தப் பயன்பாட்டிற்குக் குறைவான அளவிலான தேவை மற்றும் மேம்பட்ட பயிர் தரம் ஆகியவற்றினை உறுதி செய்கிறது.
சல்பர் பூசப்பட்ட யூரியா மண்ணில் நைட்ரஜனை மெதுவாக வெளியிட உதவுகிறது, எனவே இது அதன் நைட்ரஜன் இருப்பு மற்றும் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
15 கிலோ யூரியா கோல்டு ஆனது 20 கிலோ வழக்கமான யூரியாவின் செயல்திறனுடன் ஒப்பிடத் தக்கது.
இந்தியாவில் 266 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை யூரியா, பாகிஸ்தானில் 800 ரூபாய், வங்கதேசத்தில் 720 ரூபாய்க்கும், சீனாவில் 2,100 ரூபாய்க்கும், அமெரிக்காவில் 3,000 ரூபாய்க்கும் விற்கப் படுகிறது.