விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழு
January 3 , 2019 2427 days 745 0
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் (Doubling Farmers Income - DFI) பரிந்துரைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக அரசானது விரைவில் ஒரு குழுவை அமைக்கவுள்ளது.
DFI குழு
நாட்டின் ஒட்டு மொத்த விவசாய சூழலியலுக்கான வழிமுறைகளையும் அதனை சீர்திருத்துவதற்கான முறைகளையும் பரிந்துரை செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு இந்த குழுவானது அமைக்கப்பட்டது.
இந்த நோக்கத்திற்காக அசோக் தால்வாய் தலைமையிலான ஒரு நிபுணர் குழு பரிந்துரைகளை அளிக்கும்படி அமைக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளின்படி விவசாயிகளின் வருமானமானது 2022-ல் இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.