TNPSC Thervupettagam

விவசாயிகளுக்கான மண் கார்பன் கொடுப்பனவுகள்

September 20 , 2026 5 hrs 0 min 29 0
  • பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் கார்பன் வரவுகளுக்கான (soil carbon credits) தனது முதல் நேரடிப் பலன் பரிமாற்றக் கொடுப்பனவுகளை இந்தியா வழங்கத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கொடுப்பனவுகள் ₹2.9 கோடிக்கும் அதிகமாக இருந்தன, மேலும் இவை மீளுருவாக்க விவசாயத்திலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட கார்பன் வரவுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
  • விவசாயிகள் 2019–2022 ஆம் ஆண்டுகளில் நேரடியாக விதைக்கப்பட்ட நெல், குறைக்கப் பட்ட உழவு மற்றும் பயிர் கழிவு மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தினர்.
  • ஆதி உழவர் கார்பன் திட்டம் 2019 ஆம் ஆண்டில் குரோ இண்டிகோ (Grow Indigo) நிறுவனத்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் ஏழு மாநிலங்களில் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பையும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • விவசாயிகளுக்கு தோராயமாக ₹3,000 முதல் ₹15,000 வரை கிடைத்துள்ளதுடன் இத்திட்டத்தின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட 45 பில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப் பட்டதுடன், 2 லட்சம் டன்களுக்கும் அதிகமான பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் தவிர்க்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்