விவசாயிகளைப் பாதுகாக்க உதவும் மேற்பூச்சுக் கூழ்மம்
March 18 , 2019 2421 days 811 0
தூறல்களில் இருந்து தோலைப் பாதுகாப்பதற்காக வேளாண் விவசாயிகளுக்கு என்று புதிய கூழ்மத்தினை உருவாக்கியுள்ளனர்.
சிட்டோசனை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கூழ்மமானது நண்டுகள் மற்றும் இறால்களின் மேலோடுகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இதனுடன் இவர்கள் ஒரு நியூக்ளோபைல் மற்றும் சில நீர்ம மறுதுணைப் பொருட்களை சேர்த்து நிலையான மற்றும் தேவையான pH மதிப்புடைய கூழ்மத்தினைப் பெறுகின்றனர்.
இந்தக் கூழ்மமானது வணிக ரீதியாக கிடைக்கக் கூடிய பரவலான பூச்சிக்கொல்லிகளை இரத்த ஓட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னரே தடை செய்கிறது. இதனால் பூச்சிக் கொல்லிகளால் தூண்டப்படும் நொதிகள் தடை செய்யப்படுகின்றன.
தீங்கு தரக்கூடியப் பாதிப்புகள்
ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக் கொல்லிகள் மனித உடலின் முக்கியமான சில நொதிகளை சுரப்பதைத் தடை செய்கிறது.
இதனால் நரம்பு மண்டலம், இதயம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும்.