இது மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதனில் அமைந்துள்ள ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மற்றும் பொது ஆராய்ச்சி மத்தியப் பல்கலைக்கழகமாகும்.
இது 1921 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தொடங்கப் பட்டது.
விஸ்வ-பாரதி ஆனது 1951 ஆம் ஆண்டில் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மற்றும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப் பட்டது.