விஸ்வகமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் INC
September 30 , 2023 687 days 436 0
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு எதிரே ‘விஸ்வகமல்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.
இது 1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கு வழி வகுத்த, ஒரு புதிய சகாப்தத்தினை உருவாக்க வழி வகுத்த கூட்டம் நடைபெற்ற இடம் ஆகும்.
1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடையாறில் நடந்த பிரம்ம ஞான சபையின் வருடாந்திர மாநாட்டிற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் இந்த இடத்தில் சந்தித்தனர்.
எனினும் ‘காங்கிரஸின் தந்தை’ எனப்படும் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இதில் பங்கேற்க வில்லை.
ஆனால் "இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் ஆனது 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டது" என சில கூற்றுக்கள் உள்ளன.
ஆனால், 1885 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், 1884 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல், அடுத்து வர இருந்த கிறிஸ்துமஸில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தினை நடத்த முடிவு செய்யப்பட்டது.