நிதி ஆயோக் அமைப்பானது சமீபத்தில் ‘வீடு தேடி வரும் பொது விநியோகம் -மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதும் பயன்படுத்தப்படும் நல்ல நடைமுறைகள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
உலக உணவுத் திட்டமும் இந்தக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களால் வீடு தேடி வரும் பொது விநியோக மதிப்புச் சங்கிலி முறையைச் செயல்படுத்துவதில் பின்பற்றப்பட்ட நல்ல மற்றும் புதுமையான நடைமுறைகளின் தொகுப்பை இது வழங்குகிறது.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு (PLW) ஊட்டச் சத்தில் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்காக, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைத் திட்டங்களின் (ICDS) துணை ஊட்டச்சத்து வழங்கீட்டுத் திட்டங்களின் கீழ், இந்திய அரசு வீடு தேடி வரும் பொது விநியோகத்தினை வழங்கச் செய்கிறது.