மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மறு சீரமைக்கப் பட்டு, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.
இந்த மண்டபம் மன்னர் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்து வீரப்ப நாயக்கரால் கி.பி 1611 இல் கட்டப்பட்டது. மேலும் இது கோவிலின் கிழக்கு கோபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
இதிலுள்ள 136 தூண்களில், 79 ஒற்றைக்கல் தூண்கள் ஸ்தபதி வி.பி. வேல்முருகன் தலைமையிலான சுமார் 150 சிற்பிகளால் புதிதாக செதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புதிய தூணும் 18.6 அடித் தண்டை கொண்டிருந்ததுடன், சிங்க உருவங்கள் உள்ளிட்ட மேற்பகுதி கூறுகளைச் சேர்த்த பிறகு சுமார் 29 அடியை எட்டியது.
மண்டபத்தில் உள்ள ஒரு கல் தொட்டிக்குள் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் சன்னதியை நோக்கியவாறு உள்ள நந்தியானது முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும்.