2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 127 வீரதீர மற்றும் சேவைப் பதக்கங்களை வழங்கினார்.
சிந்தூர் நடவடிக்கையின் பணியாளர்கள் 16 சௌர்ய சக்ரா பதக்கங்கள், 15 வீர் சக்ரா பதக்கங்கள், 4 கீர்த்தி சக்ரா பதக்கங்கள் மற்றும் ஏராளமான சேனா, நவோ சேனா மற்றும் வாயு சேனா பதக்கங்களைப் பெற்றனர்.
மத்திய சேமக் காவல் படை (CRPF) ஆனது, மத்திய ஆயுதக் காவல் படைகளில் மிக அதிகமாக 23 வீரதீரப் பதக்கங்களை வென்றது.
இதில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மேற் கொள்ளப் பட்ட வீர நடவடிக்கைகளுக்காக என்று வழங்கப்பட்ட 3 சௌர்ய சக்ரா பதக்கங்கள் மற்றும் 20 வீரதீரப் பதக்கங்கள் அடங்கும்.
மகத்தான துணிச்சல் மற்றும் தலைமைத்துவத்திற்காக என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளர் முகமது இம்தேயாஜ் மற்றும் கான்ஸ்டபிள் தீபக் சிங்ககாம் ஆகியோருக்கு மரணத்திற்குப் பின்னதாக வீர் சக்ரா விருது வழங்கப் பட்டது.
சர்வோத்தம் யுத் சேவா பதக்கங்கள் லெப்டினன்ட் ஜெனரல் இராஜீவ் காய் மற்றும் ஏர் மார்ஷல்கள் நர்மதேஷ்வர் திவாரி, நாகேஷ் கபூர், ஜீதந்திர மிஸ்ரா மற்றும் A.K. பாரதி போன்ற உயர் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.