வீரதீர விருது பெற்ற முதல் பெண் விமானப் படை அதிகாரி
April 29 , 2023 831 days 411 0
இந்திய விமானப்படையானது (IAF), அதன் விமானப் படைத் தலைமைப் பணியாளரான தீபிகா மிஸ்ராவுக்கு வாயு சேனா என்ற பதக்கத்தினை வழங்கியுள்ளது.
இதன் மூலம், இந்த வீரதீர விருதினைப் பெற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப் பட்ட வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் போது அவர் ஆற்றிய “மகத்தான பல்வேறு துணிவு மிக்க நடவடிக்கைகளுக்காக” இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வீரதீர விருது பெற்ற 58 பணியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.