2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சென்னையில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவின் போது, பீட்டர் ஜான்சனுக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
ஜூன் 2025ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய இரண்டு இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் உயிரிழந்தார்.
திடீர் வெள்ளத்தின் போது மக்களை மீட்டதற்காக மூன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், வி. சங்கர், எஸ். ரமேஷ்குமார் மற்றும் பி. சுரேஷ் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர்.
அண்ணா வீரதீர விருதானது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 9,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.