மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது வீர் கதா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
வீர தீர விருதுகள் வென்றவர்கள் குறித்து அறிக்கைகளைத் தயார் செய்து அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பள்ளிகளிடம் கோரப்பட்டுள்ளது.
பள்ளி மாணாக்கர்களிடையே வீர தீர விருதுகள் வென்றவர்களின் தியாகங்கள் மற்றும் துணிச்சலான செயல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை வீர் கதா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.