தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ஆனது வீரர்கள், மூத்த/முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களை ஆதரிப்பதற்காக வேண்டி இந்தத் திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டமானது இராணுவம் மற்றும் துணை இராணுவப் பணியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப இலவச சட்ட உதவி, ஆலோசனை மற்றும் பெரும் ஆதரவை வழங்குகிறது.
சேவைகளில் இணைய வழி விண்ணப்பத் தாக்கல், ஒளிப்பட இணைப்பு மூலமான ஆலோசனைகள், இணைய வழி லோக் அதாலத்கள் மற்றும் இயங்கலை வழி நடுவம் ஆகியவை அடங்கும்.
இது சம நீதி மற்றும் சட்ட உதவியை உறுதி செய்கின்ற அரசியலமைப்பின் 39Aவது சரத்தினை அடிப்படையாகக் கொண்டது.
NALSA என்பது 1987 ஆம் ஆண்டு சட்டச் சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.